Breaking News

உடுமலை அருகே பூமிலட்சுமி ஆண்டாள் நாச்சியார் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி, திருக்கல்யாண உற்சவம்






உடுமலை அருகே  பூமிலட்சுமி ஆண்டாள் நாச்சியார் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி, திருக்கல்யாண உற்சவம் 

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குறிஞ்சேரியில், புகழ்பெற்ற  பூமிலட்சுமி ஆண்டாள் நாச்சியார் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆடிப்பூரத்தையொட்டி சிறப்பு வழிபாடு ஆக., 4ம் தேதி துவங்கியது முதல் நாளில், காலையில் கோ பூஜை, சுதர்சன ஹோமம், தன்வந்திரி, மகாலட்சுமி மற்றும் குபேர ஹோமம்  நடைப்பெற்றது . 5, 6 ம் தேதிகளில்  உலக நன்மைக்காகவும் அனைவரும் நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ துளசி மற்றும் ரோஸ் சம்மங்கி பூக்களால் சிறப்பு லட்சார்ச்சணை நடைபெற்றது . இதற்கிடையில் இன்று முக்கிய நிகழ்வான ஸ்ரீ ரங்கமன்னார் - ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சுவாமிகள் திருக்கல்யாண உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது பின்னர் மகா தீபாரதனையும் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீரங்க மன்னார்- ஆண்டாள் நாச்சியார் பக்தர்களுக்கு அருள் பாலித்தர் பின்னர் பின்னர் மாலை மாற்றுதல் ,சிறுவர் சிறுமியர் நடனம்  உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இதற்கிடையில் திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மஞ்சள் கயிறு ,வளையல் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தனி சன்னதியில் உள்ள ஆண்டாள் நாச்சியாருக்கு பால் தயிர் மஞ்சள் உட்பட பதினாறு வகையான அபிஷேகங்கள் மேற்கொள்ளப்பட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வளையல்கள் அணிவித்து சிறப்பு வழிபாடும் மேற்கொள்ளப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.விழாவுக்கான ஏற்பாடுகளை குறுஞ்சேரி பூமி லட்சுமி ஆண்டாள் நாச்சியார் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

No comments