Breaking News

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நலச் சங்க கூட்டம்

 பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நலச் சங்கம் கூட்டம்
பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளி நலச் சங்க கூட்டம் பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா தலைமையில் நடைபெற்றது. 
மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா முன்னிலை வகித்தார். மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவமனை ஊழியர்கள் பல துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கவுன்சிலர் சாந்தலிங்கம்,நோயாளி நல சங்க உறுப்பினர் வெள்ளை நடராஜ் முதலியார் கலந்து கொண்டனர். 
1. மருத்துவமனை வளாகம் பெரியதாக ஆகி உள்ளதால் நோயாளிகள் ஒரு கட்டிடத்தில் இருந்து அடுத்த கட்டிடத்திற்கு செல்வதற்கு சி எஸ் ஆர் மூலமாக ஒரு பேட்டரி கார் வாங்க தொண்டு நிறுவனங்களை அணுகலாம் என்று முடிவு செய்யப்பட்டது. 
2. ⁠ 462 உள் நோயாளிகளுக்கு தினமும் மூன்று வேளையும் உணவு எடுத்து சென்று கொடுப்பதற்காக மூன்று சக்கர மோட்டார் வாகனம் ஒன்று சிஎஸ்ஆர் நிதி மூலம் வாங்கலாம் கோரிக்கை வைக்கப்பட்டது.
3.  மருத்துவமனையின் பொதுக்கழிவுகள் தினம் தோறும் அகற்றுவதற்காக ஆலோசனை நடத்தப்பட்டது. 
4. ⁠ புதியதாக கட்டப்படவுள்ள ஜப்பான் ஜெயிக்கா கட்டிடம் குறித்து பொதுப்பணித்துறையின் அதிகாரிகளிடம் சார் -ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்கள்.
5. ⁠ மருத்துவமனை சார்பாக தாய்ப்பால் வார விழா சிறப்பாக நடத்தப்பட்டது குறித்து சார் ஆட்சியர்  மருத்துவமனை குழந்தைகள் நலப் பகுதி நிர்வாகிகளை பாராட்டினார்கள்.
6. பொள்ளாச்சி பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை அணுகி மருத்துவமனைக்கு வேண்டிய மருத்துவ உபகரணங்கள் மற்ற பொருட்கள் கேட்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
7. பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 25 லட்சம் ரூபாய்க்கு உபகரணங்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொடுப்பதற்காக சம்மதித்துள்ளார்கள். அவருக்கு நோயாளி நல சங்க உறுப்பினர்கள் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

No comments