Breaking News

தமிழ் எம்ஏ படித்தவர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை பணிகளில் முன்னுரிமை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்


 தமிழ் எம்ஏ படித்தவர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை பணிகளில் முன்னுரிமை

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்

தமிழ் எம்ஏ படித்தவர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறையில் உதவி இயக்குணர் பணியிடங்களுக்கு முன்னுரிமை அளித்தப்படும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
 பரம்பிக்குளம் -ஆழியாறு எனும் பிஏபி பாசன திட்டம் செயல்படுதிய  முன்னாள் முதல்வர்  காமராஜர் மற்றும் இத்திட்டம் செயல்படுத்த காரணகர்த்தாவாக முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.கே. பழனிச்சாமிகவுண்டர், நா. மகாலிங்கம் கவுண்டர் உள்ளிட்டவர்கள் நினைவாக  பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள கண்காணிப்பு பொறியாளர் அலுவலக வளாகத்தில் ரூபாய் 4.28 கோடி மதிப்பில் நினைவு மணிமண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் சனிக்கிழமை ஆய்வு செய்தார். அவருடன் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, திமுக நகரச் செயலாளர் நவநீதகிருஷ்ணன், நகர்மன்றத்தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், திமுக நிர்வாகிகள் மருதவேல், தர்மராஜ் மற்றும் நீர்ப்பாசனத்துறை  அதிகாரிகள் உடன் இருந்தனர். 
பின்னர் அமைச்சர் மு. பெ சாமிநாதன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது...பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டம் செயல்படுத்துவதற்கு காரணமாக இருந்த முன்னாள் முதல்வர் காமராஜர் உள்ளிட்ட நான்கு பேருக்கு மணி மண்டபம் கட்டும் பணிகள் விரைவில் முடிக்கப்படும். இந்த மணி மண்டபத்தில் அமைக்கட்ட உள்ள அவர்களுக்கு திருவுருவ சிலைகளுக்கு  ஆண்டுதோறும் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும். தமிழ் வளர்ச்சித் துறையில் தமிழில் எம் ஏ பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு டிஎன்பிசி மூலமாக உதவி இயக்குனர்கள் நியமனம் என்ற நடைமுறை இதுவரை இல்லை. தமிழ் எம் ஏ படித்தவர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டதன் அடிப்படையில் ஏற்கனவே தட்டச்சராக பொறுப்பேற்று அதன் பின் கண்காணிப்பாளராக பணியாற்றி பின்பு உதவி இயக்குனராக பதவி உயர்வு வழங்கப்பட்டு பணியாற்றி கொண்டு இருக்கிறார்கள். வரும் காலங்களில் 50 சதவீதம்  தமிழ் எம்.ஏ. படித்தவர்களுக்கு உதவி இயக்குனர் வாய்ப்பு வழங்கபடும் என தெரிவித்தார்.

No comments