வால்பாறையில் பேரிடர் மீட்பு குழு சார்பாக பள்ளி மாணவர்களுக்கு ஒத்திகை நிகழ்ச்சி
வால்பாறையில் பேரிடர் மீட்பு குழு சார்பாக பள்ளி மாணவர்களுக்கு ஒத்திகை நிகழ்ச்சி
தென்மேற்குப் பருவமழை வால்பாறை பகுதியில் தீவிரமடைந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசு செய்து வருகிறது.
இந்நிலையில், வால்பாறைக்கு வெள்ளிக்கிழமை பேரிடர் மீட்பு குழுவினர் வருகை புரிந்துள்ளனர். பேரிடர் மீட்பு குழுவினர் சனிக்கிழமை வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு ஒத்திகை செய்து காண்பித்தனர்.
வெள்ளம், மண் சரிவு மற்றும் இயற்கை சீற்றங்கள் போன்றவற்றில் பாதிக்கப்பட்டால் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
No comments