Breaking News

யானை துரத்தி காயமடைந்த நபருக்கு வனத்துறை சார்பில் நிவாரணம்

யானை துரத்தி காயமடைந்த நபருக்கு வனத்துறை சார்பில் முதல் கட்டமாக ரூ.10,000 நிவாரணம் வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலைப்பேட்டை வனச்சரகத்தை சேர்ந்த குறுமலை மலைவாழ் குடியிருப்பை சேர்ந்த  வெங்கிட்டனை யானை  துரத்தியதில் வலது காலில் காயம் ஏற்பட்டது. காயம் ஏற்பட்ட வெங்கிட்டன் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை மருத்துவமனையில் திருப்பூர் வனக்கோட்ட துணை இயக்குனர் தேவேந்திர குமார் மீனா, உடுமலை வனசரக அலுவலர் மணிகண்டன் ஆகியோர் சென்று  யானை துரத்தி காயம் பட்ட நபரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் முதல் கட்ட நிவாரணமாக ரூ.10000 வழங்கினர்.

No comments