அன்னூர் தெற்கு ஒன்றியத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கல்
அன்னூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான பிஆர்.ஜி அருண்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் தெற்கு ஒன்றிய செயலாளர் ஓ.எஸ் சாய் செந்தில், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாசர், நாடாளுமன்ற வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், ஒன்றிய கவுன்சிலர் கே.ஓ பிரபு, மாவட்ட எம்,ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் சசிகுமார், மாவட்ட மாணவர் அணி செயலாளர் கோகுல், இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் வசந்த் சண்முகம் மற்றும் அன்னூர் தெற்கு ஒன்றிய, மாவட்ட, ஊராட்சி நிர்வாகிகள், கிளைக் செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முன்னாள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments