வால்பாறை அரசு மருத்துவமனையில் ஹாஸ்பிடல் ஒர்க்கர்ஸ் அனைத்து பணியிடமும் காலி
வால்பாறை அரசு மருத்துவமனையில் ஹாஸ்பிடல் ஒர்க்கர்ஸ் அனைத்து பணியிடமும் காலி
கண்டுகொள்ள ஆள் இல்லை
கோவை மாவட்டத்தில் உள்ள கோடை வாசஸ்தலங்களில் முக்கியமானதாக வால்பாறை உள்ளது. வால்பாறை தனி தாலுக்காவாகவும் உள்ளது. இங்கு தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.
இது தவிர வால்பாறை நகரத்தில் பல்வேறு தொழில் செய்யும் மக்களுக்கும் வால்பாறை அரசு மருத்துவமனையில் தான் நோய்களுக்கு மற்றும் அவசர சிகிச்சைகளுக்கு சிகிச்சை பெற முடியும்.
வால்பாறை அரசு மருத்துவமனை நம்பி பல்லாயிரக்கணக்கானோர் உள்ளனர்.
இந்நிலையில், வால்பாறை அரசு மருத்துவமனையில் ஹாஸ்பிடல் ஒர்க்கர்ஸ் பணியிடங்களில் மொத்தம் 12 பேர் பணியாற்ற வேண்டும்.
ஆனால், அங்கு அனைத்து பணியிடமும் காலியாக உள்ளது. தினசரி கூலி அடிப்படையில் நான்கு பேர் மட்டுமே அங்கு பணியாற்றுகின்றனர். இதனால், மருத்துவமனைகளில் சுகாதாரம் கேள்விக்குறியாகவும் நிலையில் உள்ளது.
இங்கு உள்ள பிணவறையில் இரண்டு பேர் உடல்களை ஒரே நேரத்தில் பிரேத பரிசோதனை செய்யும் வசதி உள்ளது. ஆறு குளிர்சாதன பெட்டி வசதியும் உள்ளது. இருந்தும் பிரேத பரிசோதனை செய்ய ஆட்கள் இல்லாததால் பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல் உள்ளது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து அங்கு இருந்து ஊழியர்கள் வந்தால் தான் பிரேத பரிசோதனை செய்யும் நிலை உள்ளது.
இந்த அவல நிலையை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மக்கள் பிரதிநிதிகள், ஆளும் கட்சியினர் என யாருமே இதை கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் புலம்புகின்றனர்.
No comments