வால்பாறை நகரத்தில் செயல்படும் ஆரம்ப சுகாதாரம் நிலையம் மீது பொதுமக்கள் புகார்
வால்பாறை நகரத்தில் செயல்படும் ஆரம்ப சுகாதாரம் நிலையம் மீது பொதுமக்கள் புகார்
வால்பாறை நகரத்தின் மையப் பகுதியில் பேருந்து நிலையத்திற்கு அருகிலும், காந்தி சிலை அருகிலும் செயல்பட்டு வருகிறது அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.
இந்த சுகாதார நிலையத்தை நம்பி அதிகமான மக்கள் உள்ளனர். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டு மருத்துவர் பணியிடங்கள் உள்ளன.
இந்த இரண்டு பணியிடங்களில் பணிபுரிந்த மருத்துவர்கள் ஒருவர் தற்போது சென்னையில் டெபிட்டேஷன் பணியிலும், மற்றொருவர் மேல் படிப்பிற்காகவும் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனால், வேறு ஒரு மருத்துவர் ஆனைமலையில் இருந்து வந்து செல்வதாக கூறப்படுகிறது. இரண்டு மருத்துவர்கள் பணிபுரிந்த இடத்தில் தற்போது ஒருவர் மட்டுமே வந்து செல்வதால் பொதுமக்களுக்கு போதுமான சிகிச்சை கிடைப்பதில்லை என்று புகார் கூறப்படுகிறது. மேலும் இந்த சுகாதார நிலையத்தில் அதிக அளவில் பிரசவங்கள் பார்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அதுவும் தற்போது கேள்விக்குறியான நிலையில் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஆகவே மக்கள் பிரதி நிதிகளும் அதிகாரிகளும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேறு பணிகளுக்கு சென்ற மருத்துவர்களுக்கு பதிலாக, அதே போல் இரண்டு மருத்துவர்கள் பணியாற்ற நடவடிக்கை எடுப்பதோடு சுகாதார நிலையத்தை மேம்படுத்த வேண்டும் எனக்கு கோரிக்கை எழுந்துள்ளது.
No comments