Breaking News

மேகிணறு பகுதியில் 3 ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்


அன்னூர் ஒன்றியத்திற்குட்பட்ட மேகிணறு பகுதியில் ஒட்டர் பாளையம், பொகளூர், வடவள்ளி  ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு துணை ஆட்சியர் மகேஸ்வரி தலைமை வகித்தார். இந்த முகாமை  திமுக ஒன்றிய செயலாளர்கள் பழனிசாமி
மு.தனபாலன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த முகாமில் 15-க்கும் மேற்பட்ட பல்வேறு அரசுத்துறைகளைச் சேர்ந்த மாவட்ட மற்றும் வட்ட அளவிலான அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர்.
இந்த முகாமில் ஊராட்சி தலைவர்கள் பொகளூர் நடராஜ், ஒட்டர்பாளையம் சுமதி, வடவள்ளி செல்வி, ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா சண்முகவேலாயுதம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவீந்திரன், உமாசங்கரி, வட்டாட்சியர் குமரி அனந்தன், திமுக நிர்வாகிகள் சேதுபதி, தவமணி, கோவிந்தராஜ் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments