Breaking News

வடுகபாளையம் ரயில்வே கேட் விரைவில் திறக்கப்படும் எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் உறுதி

வடுகபாளையம் ரயில்வே கேட் விரைவில் திறக்கப்படும் 

எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் உறுதி 
பொள்ளாச்சியில் இருந்து வடுகபாளையம் செல்லும் ரயில்வே கேட் சமீபத்தில் மூடப்பட்டது.

 இந்த ரயில்வே கேட் மூடப்பட்டதால் பொள்ளாச்சியில் இருந்து வடுகபாளையம் செல்லும் அரசு பேருந்தும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

 இது தவிர, பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் வேலைக்கு செல்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 இதை அடுத்து ரயில்வே கேட்டை மீண்டும் திறக்க வேண்டி எம்.எல்.ஏ., பொள்ளாச்சி வி. ஜெயராமன் தலைமையில், அதிமுக நகர செயலாளர் கிருஷ்ணகுமார், ஒன்றிய செயலாளர் ஆர்.ஏ., சக்திவேல் மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஜேம்ஸ் ராஜா, கனகு, பத்மநாபன், வசந்த் உட்பட நூற்றுக்கும் அதிகமான பொதுமக்கள் திங்கள்கிழமை அன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

 அப்போது, ரயில்வே கேட்டை மீண்டும் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.  மாவட்ட ஆட்சியர் ரயில்வே கேட்டை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததாக எம்எல்ஏ பொள்ளாச்சி வி ஜெயராமன் கூறியுள்ளார். விரைவில் இந்த ரயில்வே கேட் திறக்கப்படும் எனவும் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

 மேலும், விவசாயிகளிடமிருந்து அரசு கொள்முதல் செய்த கொப்பரையை விற்பனை செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், மேலும் தேங்காய் மற்றும் கொப்பரை விலை வீழ்ச்சி ஆகும் என்றும், ஆகவே இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு இருப்பில் உள்ள தேங்காயை எண்ணெயாக மாற்றி நியாயவிலை கடைகளில் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை அளிக்கப்பட்டது.

No comments