மானாம்பள்ளியில் பராமரிக்கப்பட்ட புலிக்குட்டி வண்டலூர் பூங்காவிற்கு இடமாற்றம்
மானாம்பள்ளியில் பராமரிக்கப்பட்ட புலிக்குட்டி வண்டலூர் பூங்காவிற்கு இடமாற்றம்
கடந்த அக்டோபர் 2021 ஆம் ஆண்டு முடிஸ் பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்டு புலிக்குட்டி ஒன்று இருப்பது வனத்துறை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, புலிக்குட்டி உயிருடன் மீட்டு மானாம்பள்ளி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இயற்கை சார்ந்த புலி கூண்டில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்த புலி குட்டிக்கு வனத்துறையினர் வனக்கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் சிகிச்சை அளித்தனர்.
மேலும் புலி குட்டிக்கு வேட்டையாடுதல் உட்பட பல்வேறு பயிற்சிகள் அங்கு வழங்கப்பட்டன.
தொடர்ந்து புலிக்குட்டியின் உடல் நலம் கண்காணிக்கப்பட்டு வந்தது.
தற்போது, புலிக்குட்டி நல்ல உடல் நிலையில் இருப்பதால் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு இடமாற்றம் செய்ய வனத்துறை உயர் அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதை அடுத்து, திங்கள்கிழமை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மானாம்பள்ளியில் இருந்து புலிக்குட்டி அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த தகவலை மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் கிரிதரன் தெரிவித்துள்ளார்.
No comments