Breaking News

அரசு சித்த மருத்துவமனைகளுக்கு முன்மாதிரியாக செயல்படும் வேட்டைக்காரன்புதூர் சித்த மருத்துவ மனை

அரசு சித்த மருத்துவமனைகளுக்கு முன்மாதிரியாக செயல்படும் வேட்டைக்காரன் புதூர் சித்த மருத்துவ மனை
அரசு சித்த மருத்துவமனைகளுக்கு முன்மாதிரியாக வேட்டைக்காரன்புதூர் அரசு சித்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. 

இந்த மருத்துவமனையால் தமிழக அரசுக்கும் சிறப்பான சிகிச்சையால் நற்பெயர் கிடைத்து வருகிறது.


இயற்கை எழில் சூழ்ந்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கோவை மாவட்டம் வேட்டைக்காரன் புதூரில் அரசு சித்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. 

இந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு பல்வேறு நோய்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு அதன் மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகம்.

இங்குள்ள சித்த மருத்துவமனையில் சர்க்கரை நோய் , கீல்வாயு,நாட்பட்ட புண்கள் ,தோல்நோய்கள் போன்ற நோய்களுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.தமிழக அரசு இம்மருத்துவமனையை தமிழகத்தின் சிறந்த சித்த மருத்துவமனையாக  அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த மருத்துவமனையில் திருமூலர் மூலிகைப் பண்ணையும் வளர்க்கப்பட்டு வருகிறது.

 இப்பண்ணையில் ஆடாதோடை , தண்ணீர்விட்டான் கிழங்கு , பெருந்தும்பை , கூந்தற்பனை , விஷ நாராயணி ,நீல நொச்சி, வெள்ளெருக்கு , செம்புளிச்சை , முள்ளங்கை , கல்யாணமுருங்கை , மாவிலிங்கம் , சிற்றரத்தை , முசுமுசுக்கை , சீந்தில், நஞ்சறுப்பான் ,பூனைக்காலி,சந்தனம், வில்வம், நெல்லி ,சர்பகந்தா ,பவளமல்லி,  முள் சீத்தா , நிலவேம்பு , அவுரி போன்ற நூற்றுக்கணக்கான மூலிகைகளையும் மூலிகை மரங்களும் பராமரிக்கப்படுகிறது.

 இம்மருத்துவமனை வளாகத்தில் பதினெண் சித்தர்களில் முதன்மையானவரும் தமிழுக்கு இலக்கணம் வகுத்தளித்த அகத்தியருக்கு சிலை அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. 


No comments