வனத்துறையினருக்கு மருத்துவ முகாம்
வனத்துறையினருக்கு மருத்துவ முகாம்
ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக்கோட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உடுமலை வனச்சரக அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற மருத்துவ முகாம் ஆனைமலை புலிகள் காப்பக வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியன் அறிவுரையின்படியும், திருப்பூர் வனக்கோட்ட துணை இயக்குனர் தேவேந்திரகுமார் மீனா முன்னிலையிலும் நடைபெற்றது.
வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
திருப்பூர் ரோட்டரி கிளப் ஏற்பாட்டில் நடைபெற்ற முகாமில் திருப்பூர் ராம் மருத்துவமனை, உடுமலை ஆர்.வி. கண் மருத்துவமனை, ஹரிஷ் பல் மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்று பரிசோதனை செய்தனர்.
வனச்சரக அலுவலர் மணிகண்டன் பணிகளை கண்காணித்தார்.
No comments