டேங்கர் லாரி மோதி இருவர் சாவு
டேங்கர் லாரி மோதி இருவர் சாவு
பொள்ளாச்சி அருகே டேங்கர் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழந்தனர்.
பொள்ளாச்சி தனியார் நிதிநிறுவனத்தில் பணியாற்றி வந்தவர்கள் சுந்தேரகவுண்டனூரைச் சேர்ந்த கவிபிரகாஷ்(20), ஜெயபிரகாஷ்(24). இவர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை மாலை வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் உடுமலை ரோடு மின்நகர் அருகே மேற்கில் இருந்கு கிழக்கு நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது, அதே திசையில் ஒரு அரசுப்பேருந்து பயணிகளை இறக்கிகொண்டிருந்தது. இருசக்கர வாகனத்தை ஓட்டிய ஜெயப்பிரகாஷ் பேருந்து நின்றதால் இருசக்கர வாகனத்தை வலது பக்கமாக செல்ல முயன்றுள்ளார்.
அப்போது, பின்னால் சென்ற டேங்கர் லாரி இருசக்கர வாகனத்தில் மோதியதில் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பொள்ளாச்சி கிழக்கு போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
---
டேங்கர் லாரி மோதி இருவர் சாவு
Reviewed by Cheran Express
on
July 28, 2024
Rating: 5
எல்லோருக்கும் எதிலும் எப்பொழுதும் அவசரம்
ReplyDelete