Breaking News

பொள்ளாச்சி வால்பாறையில் வீடு இடிந்து மூவர் உயிர் இழப்பு

பொள்ளாச்சி வால்பாறையில் வீடு இடிந்து மூவர் உயிர் இழப்பு 
வால்பாறை அடுத்த சோலையார் அணை பகுதியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முத்தம்மாள் என்கிற ராஜேஸ்வரி (43) அவரது பேத்தி தனப்பிரியா (15) ஆகிய இருவரும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர்.

 அந்தப் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் மூன்று மணியளவில் வீட்டின் சுவர் இடிந்து சரிந்து இருவரும் உயிரிழந்துள்ளனர்.
 அதேபோல் பொள்ளாச்சி அடுத்த திப்பம்பட்டி அண்ணாநகரை சேர்ந்த அன்பழகன் மகன் ஹரிஹரசுதன் (20) சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார்.

 சோலையார் அணை உயிரிழப்பு குறித்து சேக்கல் முடி போலீசாரும், திப்பம்பட்டி ஹரிஹரசுதன் உயிரிழப்பு குறித்து கோமங்கலம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


No comments