Breaking News

விபத்து அபாயத்தில் சீனிவாசபுரம் ரயில்வே தரைப்பாலம்

விபத்து அபாயத்தில் சீனிவாசபுரம் ரயில்வே தரைப்பாலம் 
விபத்து ஏற்படும் அளவிற்கு சீனிவாசபுரம் ரயில்வே தரைப்பாலம் சேதமடைந்து உள்ளது.
பொள்ளாச்சி -மீன்கரை சாலையில் சீனிவாசபுரம் பகுதியில் ரயில்வே தரைபபாலம் அமைக்கப்பட்டுள்ளது.

 இந்தத் தரைப்பாலம் அமைக்கப்பட்டதிலிருந்து அடிக்கடி பள்ளங்கள் ஏற்பட்டு சேதம் அடைந்து விடுகிறது. இதனால், பல்வேறு விபத்துகளும் ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறையும் பள்ளங்கள் சரி செய்யப்பட்டாலும் மீண்டும் அதிக அளவில் பள்ளங்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு அபாயகரமாக இருந்து வருகிறது. 

ரயில்வே தரைப்பாலத்திற்கு கீழ் போதுமான வெளிச்சம் இல்லாததால் பள்ளங்கள் இருப்பதும் தெரிவதில்லை. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழும் நிலை ஏற்படுகிறது.

தற்போது, இந்த தரைப்பாலத்தில் வாகனங்களில் செல்ல முடியாத அளவிற்கு மிகப்பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.

 மீண்டும் அதிகமான விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன்பு இந்தப் பள்ளங்களை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

No comments