கொப்பரைக்கான நிலுவை தொகை கேட்டு விவசாயிகள் தர்ணா போராட்டம்
விவசாயிகள் சார்- ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்
தேங்காய் விலை வீழ்ச்சியை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் ஆதார விலை நிர்ணயித்து விவசாயிகளிடம் இருந்து தேங்காய் கொப்பரைகளை கொள்முதல் செய்து வருகிறது.
அப்படி கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரைகளுக்கு கடந்த மூன்று மாதமாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை அரசு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
அரசிடம் விவசாயிகள் தேங்காய் கொப்பரைகான நிலுவைத் தொகையை கேட்டு பலமுறை கோரிக்கை வைத்தும் தற்போது வரை வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தென்னை விவசாயிகள் பொள்ளாச்சி சார்- ஆட்சியர் அலுவலகத்தில் நிலுவை தொகையை வழங்க வேண்டி கோரிக்கை வைத்து வியாழக்கிழமை காலையில் இருந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Nice
ReplyDelete