பொள்ளாச்சி வனச்சரகத்தில் தனிநபர் எருமை வளர்ப்பு
பொள்ளாச்சி வனச்சரகத்தில் தனிநபர் எருமை வளர்ப்பு
வன உயிரினங்களுக்கு உணவுத் தட்டுப்பாடு
ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்தில் தனிநபர்களால் எருமை வளர்ப்பு அதிகமாக உள்ளதால் வன உயிரினங்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, காட்டு மாடு, மான்கள் என பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
இந்நிலையில், தனி நபர்கள் ஒரு சிலர் 50க்கும் மேற்பட்ட எருமைகளை ஆழியாறு அணை மற்றும் பொள்ளாச்சி வனச்சரகத்தில் நவமலை செல்லும் வழித்தடங்களில் மேய்த்து வருகின்றனர்.
இதனால், வன உயிரினங்களான யானை, காட்டுமாடு, மான், காட்டுப்பன்றி போன்ற பல்வேறு உயிரினங்கள் உணவின்றி தவித்து வருகின்றன.
வன உயிரினங்கள் உணவுக்காக வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாயப் பகுதிகளுக்குள் புகுந்து விடுகின்றன.
வன உயிரினங்கள் விவசாயப் பகுதிகளுக்குள் செல்வதால் மனித- வன உயிரின மோதல் ஏற்படுகிறது.
மேலும், மலைவாழ் மக்கள் வனப்பகுதிக்கு வெளியே சிறிய வகை ஆடுகளை வளர்க்க முடியாமல் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது.
ஆகவே, வனத்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் இணைந்து தனி நபர்களின் கால்நடைகளை ஆழியாறு அணை பகுதி மற்றும் வனப்பகுதிக்குள் அனுமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும், வனப் பகுதிக்குள் வசிக்கும்
No comments