Breaking News

அரசு மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கல்


அரசு மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கல்


பொள்ளாச்சி அரசு மருத்துவ மனைக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை இந்திய இம்யூனோலாஜிக்கல் என்ற தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனம் வழங்கியது.
 
 இந்தியன் இம்யூனோலாஜிக்கல் நிறுவனம் ஹைதராபாத்  இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் நோய்களுக்கு தடுப்பூசி தயாரிக்கு பணியில் ஈடுபட்டுவருகிறது. 

அந்த நிறுவனத்தின்ய நிர்வாக இயக்குனர் டாக்டர் ஆனந்தகுமார்  பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ. 25 லட்சம் மதிப்பில் அறுவை சிகிச்சை, தீவிர சிகிச்சை பிரிவு, மற்றும் ரத்த வங்கி பிரிவிற்கு தேவையான நவீன மருத்துவ உபகரணங்களை சனிக்கிழமை வழங்கினார். 

பொள்ளாச்சி ரோட்டரி சங்கம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு  மருத்துவ உபகரணங்களை பெற்றுக் கொண்டனர்.

 இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இந்திய இம்யூனோலாஜிக்கல் நிறுவன நிர்வாக இயக்குனர் ஆனந்த்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது...

 ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் எங்கள் நிறுவனம் விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு பரவும் நோய்களை வருமுன் காப்போம் என்ற திட்டத்தின் அடிப்படையில் தடுப்பதற்கான தடுப்பூசிகளை தயார் செய்து இந்தியா மட்டுமல்லாது  60 வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறோம்.  குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் பல்வேறு நாடுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தலின்படி தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப் பட்டது. தற்போது டெங்கு, சிக்கன் குனியா, ஜிகா வைரஸ் போன்ற நோய்களுக்கான தடுப்பூசிகள் தயாரிப்பதற்கான முதல் கட்ட ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. 

இன்னும் இரண்டு ஆண்டுகளில் டெங்கு தடுப்பூசி மருந்துகள் வினிநோயகம் செய்யப்படும். மஞ்சள் காமாலை நோய்க்கான தடுப்பூசி சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்தியாவில் அதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி ஆராய்ச்சி பணியில் மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது என்றார்.

No comments