பொள்ளாச்சியில் வெளி மாநில மது பறிமுதல்
பொள்ளாச்சியில் கள்ள சந்தையில் வெளி மாநில மது விற்பனை
454லிட்டர் பறிமுதல்
தமிழகத்தில் கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ள சாராயம் குடித்து அதிகமான உயிரிழப்பு ஏற்பட்டது தமிழகம் எங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போதை பொருள் விற்பனை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.
பொள்ளாச்சி அடுத்த சி.கோபாலபுரம் பகுதியில் மதுவிலக்கு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியில் சந்தேகத்திற்கு இடமாக வந்த பிக்கப் வாகனத்தை சோதனை செய்தனர்.
பொள்ளாச்சி மதுவிலக்கு அமலாக்க துறை ஆய்வாளர் செல்வம் தலைமையிலான போலீசார் பிக்கப் வாகனத்தில் இருந்த 454 லிட்டர் வெளி மாநில மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட செந்தில்குமார், விக்நேஷ்பிரபு, ஆனந்தகுமார் ஆகிய மூன்று பேரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சியில் வெளி மாநில மது பறிமுதல்
Reviewed by Cheran Express
on
June 23, 2024
Rating: 5
No comments