Breaking News

மாசாணி அம்மன் கோயிலில் உண்டியல் எண்ணிக்கை

மாசாணியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணிக்கை

ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் உண்டியல் திறப்பில் ரூ. 84 லட்சத்து 16 ஆயிரத்து 813 கிடைக்கப்பெற்றுள்ளது.

 ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. உள்ளூர் மட்டுமின்றி வெ ளியூர்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்வார்கள். 

 தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் உண்டயலில் செலுத்தும் காணிக்கைகள் மாதந்தோறும் எண்ணப்படும். வியாழக்கிழமை நிரந்த உண்டியல் எண்ணப்பட்டது. 
 இதில் ரூ.84 லட்சத்து 16 ஆயிரத்து 813 தொகையும், 426 கிராம் பலமாற்று பொன்னிங்களும், 846 கிராம் வெள்ளியினங்களும் கிடைக்கப்பெற்றுள்ளது. 
 
 உண்டியல் திறப்பில் அறங்காவலர் குழுத்தலைவர் முரளிகிருஷ்ணன்,  மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில் துணை ஆணையர் செந்தில்குமார், மாசாணியம்மன் கோயில் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, அறங்காவலர்கள் திருமுருகன், மஞ்சுளாதேவி, மருதமுத்து, கண்காணிப்பாளர் புவனேஸ்வரி, ஆய்வாளர் சித்ரா, சலவநாயக்கன்பட்டி  ஊர்பொதுமக்கள் பங்கேற்றனர்.

No comments