மாசாணி அம்மன் கோயிலில் பராமரிப்பு இல்லாத கழிப்பறைகள்
மாசாணி அம்மன் கோயிலில் பராமரிப்பு இல்லாத கழிப்பறைகள்
ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த கோயிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர்.
பக்தர்கள் வசதிக்காக மாசாணி அம்மன் கோயிலில் கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், இந்த கழிப்பிடங்கள் முறையாக சுத்தப்படுத்தப்படாமலும், பராமரிக்கப்படாமலும் இருந்து வருவதாக பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மாசாணி அம்மன் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
No comments