Breaking News

வேகத்தடை அமைக்கக்கோரி சாலை மறியல்

வேகத்தடை அமைக்கக்கோரி சாலை மறியல்

பொள்ளாச்சி பிஏ கல்வி நிறுவனங்கள் முன்பு சாலையில் வேகத்தடை அமைக்கக்கோரி மாணவர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 பொள்ளாச்சி-பல்லடம் சாலை புளியம்பட்டியில் பிஏ சர்வதேச பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட்டுவருகின்றன. இந்த கல்வி நிறுவனங்கள் முன்பு அடிக்கடி விபத்து நடப்பதால் வேகத்தடை கேட்டு கோரிக்கை இருந்துவருகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை மாணவர்கள், ஆசிரியர்கள் பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் கல்வி நிறுவனங்கள் முன்பு வேகத்தடை அமைக்கவேண்டி மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் வந்து பேச்சு நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

No comments