பாதுகாப்பு கேட்டு எஸ்.சந்திராபுரம் கிராம மக்கள் சார்-ஆட்சியரிடம் கோரிக்கை
பாதுகாப்பு கேட்டு எஸ்.சந்திராபுரம் கிராம மக்கள் சார்-ஆட்சியரிடம் கோரிக்கை
எஸ்.சந்திராபுரம் கிராம மக்கள் பாதுகாப்பு கேட்டு பொள்ளாச்சி சார்-ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.
பொள்ளாச்சி அடுத்த எஸ்.சந்திராபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சூரியபிரகாஷ்(27), அருண்ராஜ்(26), இவர்கள் கடந்த 13ம் தேதி மணிகண்டன் என்பவரை தாக்கியதில் அவர் ஞாயிற்றுக்கிழமையன்று உயிரிழந்தார். அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், எஸ்.சந்திராபுரம் கிராமத்தை சேர்ந்த 50க்கும் அதிகமான மக்கள் திங்கள்கிழமை பொள்ளாச்சி சார்-ஆட்சியர் கேத்தரின் சரண்யாவிடம் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என கேட்டும், மணிகண்டனை கொலை செய்தவர்கள் மீண்டும் ஜாமினில் வெளியில் வந்தால் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி புகார் தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த சார்-ஆட்சியர் தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.
No comments