Breaking News

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுப்பு துவக்கம்


ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுப்பு துவக்கம் 
ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி கோட்டத்தில் வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி, பொள்ளாச்சி ஆகிய நான்கு வனச்சரகங்களில் வியாழக்கிழமை யானைகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது.

 தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த பணிகள் நடைபெறும். ஒருங்கிணைந்த முறையில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்களில் ஒரே நேரத்தில் இந்த யானைகள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.
 ஆனைமலை புலிகள் காப்பக தலைமை வனப் பாதுகாவலர் ராமசுப்பிரமணியம், மாவட்ட வன அலுவலர் பர்கவ்தேஜா ஆகியோர் ஆலோசனைப்படி கணக்கெடுப்பு நடைபெற்றது.

 மானாம்பள்ளி வனச்சரகத்தில் வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமையிலும், வால்பாறை வனச்சரகத்தில் வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் தலைமையிலும், பொள்ளாச்சி வனச்சரகத்தில் வனச்சரக அலுவலர் புகழேந்தி தலைமையிலும், உலாந்தி வனச்சரகத்தில் வனச்சரக அலுவலர் சுந்தரவேல் தலைமையிலும் கணக்கெடுப்புகள் நடைபெறுகிறது.

No comments