Breaking News

ரூ .6000 லஞ்சம் பெற்ற பொள்ளாச்சி நகராட்சி ஊழியர் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை

ரூ .6000 லஞ்சம் பெற்ற பொள்ளாச்சி நகராட்சி ஊழியர் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை
பொள்ளாச்சி நகராட்சியில் வருவாய் உதவியாளராக பணியாற்றியவர் யோகேந்திரன். 

இவர் பொள்ளாச்சியை சேர்ந்த பெண் வக்கீலிடம் பெயர் மாற்றம் செய்வதற்காக 6000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பெண் வக்கீல் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பெண் வக்கீல், ரசாயணம் தடவிய பணத்தை, யோகேந்திரனிடம் கொடுக்கும் போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்தனர். 
சம்பந்தப்பட்ட யோகேந்திரனிடம்  தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

No comments