Breaking News

நேதாஜி இளைஞர் பேரவை சார்பில் செவிலியர் தின விழா

நேதாஜி இளைஞர் பேரவை சார்பில் செவிலியர் தின விழா


பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் செவிலியர் தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

 நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை தலைவர் வெள்ளை நடராஜ் தலைமை வகித்தார். மருத்துவர்கள் சரவணக்குமார், ஜோதிகலா, மணிமேகலை, கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செவிலிய கண்காணிப்பாளர் கௌரி வரவேற்றர்.

 அனைத்து செவிலியர்களுக்கும் மாலை அணிவித்தும், பொன்னாடை அணிவித்தும் மரியாதை செய்யப்பட்டது. இனிப்புகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கவிஞர் முருகானந்தம், நகர மன்ற உறுப்பினர் சாந்தலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.பேரவை செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

No comments