Breaking News

மாசாணி அம்மன் கோயிலில் 32 கிலோ 663 கிராம் தங்க நகைகள்

மாசாணி அம்மன் கோயிலில் 32 கிலோ 663 கிராம் தங்க நகைகள் 

ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் தரம் பிரித்து அளவீடு 
 ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் இதுவரை பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்க நகைகள் 32 கிலோ 663 கிராம் இருப்பது தெரியவந்துள்ளது.

 ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

 இதனால், கோயிலுக்கு கிடைக்கும் வருவாய் மாதம் தரும் எண்ணப்படுகிறது. பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் தங்க நகைகள் திங்கள்கிழமை அன்று ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜு  முன்னிலையில் தரம் பிரித்து அளவீடு செய்யப்பட்டது.
 இதில் 32 கிலோ 663 கிராம் தங்க நகைகள் இருப்பது அளவீட்டில் தெரியவந்தது. கோவை இணை ஆணையர் ரமேஷ், துணை ஆணையர் விஜயலட்சுமி, மாசாணி அம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன், கோயில் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, அறங்காவலர்கள் தங்கமணி, திருமுருகன், மஞ்சுளா தேவி, மருதமுத்து மற்றும் கோயில் பணியாளர்கள் இருந்தனர்.

 மேலும் 6 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கணக்கிடும் பணி கண்காணிக்கப்பட்டது.

No comments