தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன்
தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன்
பொள்ளாச்சி அருகே தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவனின் பெற்றோர்கள் சிகிச்சைக்காக பொதுமக்கள் உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
பொள்ளாச்சி அடுத்த செம்மனாம்பதி கிராமத்தை சேர்ந்தவர்கள் விஜய் - திவ்யா தம்பதியினர். இவர்கள் விவசாயம் செய்து வருகிறார்கள். இவர்களது ஒரே மகன் உதயதீரன்(4). கடந்த சில மாதங்களாக தங்களுடைய மகனின் உடலில் சில மாற்றங்கள் தெரிந்ததால் மருத்துவர்களை நாடியுள்ளனர்.
பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவனுக்கு தசைநார் சிதைவு நோய் இருப்பதாகவும், இதற்கு் இந்தியாவில் சிகிச்சை இல்லையென்றும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, துபாயில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்று சிறுவனுக்கு பரிசோதனை செய்தனர்.
அந்த நோய்கு சிகிச்சையளிக்க கோடிக்கணக்கில் செலவு ஆகும் என அந்த மருத்துவமனை தெரிவித்துள்ளதால் சிகிச்சைக்காக விருப்பமுள்ள பொதுமக்கள் உதவி செய்யவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments