Breaking News

அமராவதி அணைக்கு வரும் தண்ணீரை தடுத்து கேரளா புதிய அணை

அமராவதி அணைக்கு வரும் தண்ணீரை தடுத்து கேரளா புதிய அணை

திருப்பூர் மாவட்டத்திலுள்ள அமராவதி அணைக்கு வரும் தண்ணீரை தடுத்து கேரள அரசியல் முக்கியபுள்ளிக்கு நெருக்கமானவரின் சுத்திகரிப்பு தண்ணீர் ஆலைக்காக கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டிவருவதாக புகார் எழுந்துள்ளது.

திருப்பூர் மாவடத்தில் அமைந்துள்ளது அமராவதி அணை.  உடுமலையில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த அணை உள்ளது. இந்த அணை 90 அடி உயரமும், 4 டிஎம்சி கொள்ளவும் கொண்டது.  
 
1958ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அணையில் இருந்து திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 55 ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாக  ஆயிர கணக்கான ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன.இதுதவிர மாவட்டத்திற்கு முக்கிய நீராதாரமாகவும் இந்த அணை உள்ளது. பல லட்சம் மக்கள் குடிநீர் ஆதாரமாக உள்ளது.

 அமராவதி அணைக்கு முக்கிய நீராதாரமாக கேரள மாநிலம் சட்ட மூணார் பகுதியிலுள்ள பாம்பாறு மேற்கு தொடர்ச்சி மலைகளில் உருவாகி அமராவதி அணையை வந்தடையும் தேனாறு, சிலந்தி ஆறு மற்றும் சின்னாறு ஆகியவை உள்ளன.

 கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநில காந்தலூர் பகுதியில் பட்டிச்சேரி என்று இடத்தில் பாம்பாறுக்கு வரும் நீரை தடுத்து பட்டிச்சேரி அணை கட்டப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலூக்கா வட்டவாட கிராம ஊராட்சிக்குட்பட்ட பெருகுடா எனும் இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தற்போது கேரளா தடுப்பணை கட்டி வருகிறது.இந்த ஆற்று நீர் அமராவதி அணைக்குவரும்  துணை ஆறான பாம்பாற்றின் ஒரு பகுதியாகும். இந்த அணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து விவசாயமும், குடிநீர் தேவையும் பாதிக்கப்படும். இந்த தடுப்பணையில் அருகிலேயே கார்ப்பரேட் நிறுவனத்திற்கு சொந்தமான குடிநீர் தயாரிப்பு ஆலை உள்ளது. 

இந்த ஆலையின் தேவைக்காகவே தடுப்பணை கட்டப்படுவதாக கூறப்படுகிறது. இந்த சுத்திகரிப்பு தண்ணீர் தயாரிப்பு ஆலை கேரள முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. 

தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கேரள அரசு அணை கட்டுவதை உறுதிசெய்துள்ளனர். 

தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

No comments