மழைக்கு மருத்துவமனை வளாகம், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
மழைக்கு மருத்துவமனை வளாகம், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
பொள்ளாச்சியில் திங்கள்கிழமை மதியம் பெய்த கனமழைக்கு தனியார் மருத்துவமனை வளாகம், மற்றும் வீடுகளுக்கு மழைநீர் புகுந்தது.
பொள்ளாச்சியில் கடந்த சில மாதங்களாக வெப்பத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுவந்தனர். இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த மழைக்கு வெப்பம் சற்று தணிந்தது.
இந்நிலையில், திங்கள்கிழமை மதியம் ஒன்றரை மணிநேரத்திற்கும் மேல் மழை கன மழை பெய்தது. இந்த மழைக்கு நியூ ஸ்கீம் சாலையில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனை வளாகத்திற்கு மழைநீர் புகுந்தது. ஆனால், நோயாளிகள் இருந்த அறைகளுக்கு தண்ணீர் புகாததால் பாதிப்பு இல்லை என்று கூறப்படுகிறது. நந்தனார் காலனி, தன்னாசியம்மன் கோயில் வீதி, 9 வது வார்டு சுப்பையன் நகர் பகுதியில் அண்ணாநகர் பகுதியில் இருந்து வெளியேறிய கழிவுநீர் மழைநீருடன் சேர்ந்து புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
திங்கள்கிழமை காலையில்தான் சுப்பையநகர் பகுதி மக்கள் பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் தங்கள் பகுதியில் மழை பெய்யும் காலங்களில் கடுமையாக பாதிப்பு ஏற்படுவதாக புகார் மனு அளித்தனர். நீண்ட ஆண்டுகளாக இந்த பிரச்சனை இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
31வது வார்டு தன்னாசியப்பன் கோயில் வீதியில் வீடுகளுக்கு மழைநீர் புகுந்ததால் அந்த பகுதியில் நகராட்சித்தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆய்வு செய்து உடனடியாக ராட்சத மோட்டார்கள் கொண்டுவந்து தண்ணீரை அகற்று பணி நடைபெற்றது.
அதேபோல், பொள்ளாச்சி பல்லடம் சாலை, உடுமலை சாலை தேர்நிலையம், கோவை சாலை போன்ற பகுதிகளில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொள்ளாச்சி புளியம்பட்டியில் தனியார் நிறுவன சுற்றுசுவர் இடிந்து சேதமானது.
மழைக்கு மருத்துவமனை வளாகம், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
Reviewed by Cheran Express
on
May 13, 2024
Rating: 5
No comments