பள்ளி சுவரில் ஓவியம் வரையும் மாணவன்
பள்ளி சுவரில் ஓவியம் வரையும் மாணவன்
ஆனைமலை பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பயின்று வந்த மாணவன் மணிகண்டன். இம்மாணவன் தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று மேல்நிலைக்கல்விக்காக வேறு பள்ளிக்குச் செல்ல உள்ளார்.
இந்நிலையில் தான் பயின்ற பள்ளிக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் தன்னிடம் உள்ள ஓவியத்திறனை வெளிப்படுத்தும் வகையில் தலைமையாசிரியர் மற்றும் தமிழாசிரியர் வழிகாட்டுதல்படி பள்ளியின் வளாகச் சுவரில் அழகான இயற்கை ஓவியங்களை வரையும் பணியைத் தொடங்கியுள்ளார்.
இதுகுறித்துப் பேசிய தமிழாசிரியர் பாலமுருகன் கூறுகையில், மணிகண்டன் ஓவியம் வரைவதில் மிகவும் திறமை வாய்ந்தவர். ஓவியப்போட்டிகளில் கலந்துகொண்டு பல பரிசுகள் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தவர்.
இக்காலகட்டத்தில் பத்தாம்வகுப்பு முடித்துவிட்டு பள்ளியை விட்டுச் செல்லும் மாணவர்கள் பள்ளியின் பொருட்களைச் சேதப்படுத்தி விட்டு செல்லும் சூழலே நிலவுகிறது.
ஆனால், எங்கள் மாணவன் பள்ளியை விட்டுச் செல்கையில் அதை மேலும் அழகாக்கிச் செல்வது என்பதில் எங்களின் கற்பித்தல் வெற்றி பெற்றுள்ளது. கற்றலோடு இங்கு ஒழுக்கமும் உயர்ந்து நிற்கின்றது.
No comments