Breaking News

கணபதிபாளையம் கந்தசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

கணபதிபாளையம் கந்தசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

பொள்ளாச்சி அடுத்த கணபதி பாளையம் கந்தசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கல்வியில் சிறந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இது தவிர விளையாட்டிலும் சிறந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

 இதனால், கந்தசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

 கந்தசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 77 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் அனைவருமே தேர்ச்சி பெற்றனர். 

மாணவர் தன்வந்த் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 100 மதிப்பெண்களை பெற்றார். மாணவி லோக்சன தர்சினி அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்றார். இருவரும் 495 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தை பிடித்தனர்.

மாணவர் சந்திரஹரி கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 100 மதிப்பெண் பெற்று மொத்தம் 492 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். சமிக்சா மற்றும் தரணீஸ் ஆகிய இருவரும் கணிதத்தில் 100 மதிப்பெண்கள் பெற்று மொத்தம் 488 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தனர்.

 கணித பாடத்தில் 8 மாணவர்களும், அறிவியல் பாடத்தில் 3 மாணவர்களும், சமூக அறிவியல் பாடத்தில் 3 மாணவர்களும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 77 மாணவர்களில் 56 மாணவர்கள்  400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

 வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் சண்முகம், செயலர் உமாமகேஷ்வரி,  ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

No comments