Breaking News

தபால் வாக்குகளை அதிகாரிகள் வாங்கவில்லை என்று கூறி நடந்து சென்று வாக்களித்த முதியவர்கள்

தபால் வாக்குகளை அதிகாரிகள் வாங்காததால் நடந்து சென்று வாக்களித்த முதியவர்கள்
பொள்ளாச்சி மரபேட்டை வீதியில் அமைந்துள்ள தொண்டு நிறுவன ம் 26 உறவினர்களால் கைவிடப்பட்ட முதியவர்கள் தங்கி உள்ளனர். இவர்களுக்கு தபால் வாக்குகள் செலுத்துவதற்கான படிவம் 12 கொடுக்கப்பட்ட போதும் அதை வாங்க தேர்தல் அதிகாரிகள் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், இன்று வாக்கு பதிவு மையத்திற்கு நடந்தே வந்த முதியவர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர். இதில் ஒரு வயதான மூதாட்டி சரஸ்வதி (94)  அவரும் வாக்குகளை செலுத்தினார். மேலும் லட்சுமி என்ற மூதாட்டியை தூக்கி வந்தனர். அந்த மையத்தின் நிர்வாகி ஒருவர் கூறும்போது... தபால் வாக்குகளை வந்து பெற்றுக் கொள்ளுமாறு தேர்தலில் நடத்தும்  அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவித்த போதும் அவர்கள் வரவில்லை என தெரிவித்தார்.

No comments