Breaking News

திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி மீது தேர்தல் விதிமீறல் புகார்

திமுக வேட்பாளர் தேர்தல் விதிமீறல் செய்ததாக பாஜக சார் ஆட்சியர் அலுவலகத்தில் புகார்
பொள்ளாச்சி டி.கோட்டம்பட்டியில் உள்ள அம்மனீஸ்வரர் கோயிலில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி புதன்கிழமை அன்று தரிசனம் செய்யச் சென்றுள்ளார். 

அங்கு கோயில் நிர்வாகம் சார்பாக பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

 மேலும் வேட்பாளர் கோயிலுக்குள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் புகார் கூறப்படுகிறது. 

இது குறித்து பாஜக நகர தலைவர் பரமகுரு தலைமையில், பொள்ளாச்சி சார் -ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பாளர் ஈஸ்வரசாமி தேர்தல் விதிமுறை மீறியதால் திமுக வேட்பாளர் மீதும்,  அமணீஸ்வரர் கோயில் அறங்காவலர் குழு சார்பாக பூரண கும்பம் மரியாதை அளித்து தேர்தல் விதி மீறல் நடைபெற்றதற்காக அறங்காவலர் குழு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் மனு அளித்துள்ளார். அவருடன் பாஜக நிர்வாகிகள் செந்தில் குமார் உட்பட பலர் இருந்தனர்.

No comments