கஞ்சா கடத்தி வந்த மூவர் கைது
ஆனைமலையில் கஞ்சா கடத்தி வந்த மூன்று பேர் கைது
பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1.250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஆனைமலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகானந்தம் தலைமையில் ஆனைமலை போலீசார் சக்தி சோயாஸ் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில் வாகனத்தில் மறைத்து வைத்திருந்த ஒரு கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து கஞ்சாவை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்த மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த விஜயகுமார் ( 26 ) கிருஷ்ணகிரி மாவட்டம் பவானி நகரை சேர்ந்த துளசிராமன் ( 24 ) ஆனைமலையை சேர்ந்த சாந்து முகமது (23) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
No comments