ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்திற்கு பூமிபூஜை
பொள்ளாச்சி ,அக்.31-
பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி
இராமபட்டிணம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 12 படுக்கை வசதிகள் கொண்ட கூடுதல் கட்டிடம் அமைப்பதற்கு பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர்
பொள்ளாச்சி வி.ஜெயராமன் பூமிபூஜை செய்து பணிகளை நேற்று துவக்கி வைத்தார்.
கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் முன்னிலை வகித்தார்.
மேலும், ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இடம் வழங்கிய இராமபட்டினம் ஜமீன் குடும்பத்தாருக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்வில்,கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்
வி.கிருஷ்ணகுமார்,பொள்ளாச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் R.A.சக்திவேல், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் ராதாமணி, விஜயராணி,ஒன்றியக்குழு துணைத்தலைவர் திரு.ஈஸ்வரமூர்த்தி இராமபட்டிணம் ஊராட்சி மன்ற தலைவர் கோபாலபுரம் பொன்னுச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments