பொள்ளாச்சியில் கரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழப்பு
பொள்ளாச்சியில் கரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழப்பு
பொள்ளாச்சி, ஏப்.7
பொள்ளாச்சியில் கரோனா பாதிப்பு ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார். 8 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பொள்ளாச்சி
பகுதியை சேர்ந்த 56 வயது ஆண் ஒருவர் கடந்த மார்ச் 31ம் தேதி கரோனா
பாதிப்பு ஏற்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில், புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பொள்ளாச்சி
அழகாபுரிவீதி, நீயூ ஸ்கீம் சாலை, மரப்பேட்டை, ஜோதிநகர் டி காலனி உள்ளிட்ட
பகுதிகளில் புதன்கிழமை 8 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் கோவை
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

No comments