Breaking News

மாட்டு வண்டியில் மணமக்கள் ஊர்வலம்

மாட்டு வண்டியில் வந்த பட்டதாரி புதுமண தம்பதியினர் 

வியந்து பார்த்த ஊர் பொதுமக்கள்

பொள்ளாச்சி. பிப்.25.

இன்று வளர்ந்து வரும் நாகரிக உலகத்தில் புதுமண தம்பதியினர் ஊர்வலமாக செல்வதற்கு பல்வேறு நவீன வசதிகளுடன் வாகனங்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றது. இந்த சூழலில் இன்றும் பழமை மாறாமல் கிணத்துக்கடவு அருகே மாட்டு வண்டியில் வந்த புதுமண தம்பதியினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

பொள்ளாச்சி அடுத்த நெகமம் பகுதியை சேர்ந்தவர் பட்டதாரி இளைஞர் பூபதி. இவருக்கும், பணப்பட்டி பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இந்திரா என்ற பெண்ணுக்கும் இன்று காலை அங்கிதொழுவு காளியம்மன் கோவிலில் திருமணம் நடைபெற்றது. 

தொடர்ந்து அங்கிருந்து கேப்பாநூர் புதூர் மணமகன் இல்லத்துக்கு புதுமணத் தம்பதியர் மாட்டு வண்டியில் கிளம்பினர்.

 மாட்டு வண்டியை தனியாக மணமகனே ஓட்ட, அவருடன் மணமகள் இந்திரா உடன் அமர்ந்திருந்தார்.

 மற்ற உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மற்ற மாட்டு வண்டியில் கூடவே ஊர்வலமாக வந்தனர்.  தங்களுடைய உறவினர் மற்றும் நண்பர்கள் புடைசூழ ஊர்வலமாக சாலையில் வந்ததை ஊர் மக்கள் வியப்புடன் பார்த்து மணமக்களை வாழ்த்தினர்.

No comments