ஆனைமலை மாசாணி அம்மனுக்கு 18 அடி நீளமுள்ள வேல் அழகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் கடந்த 11ஆம் தேதி கொடியேற்றம் நிகழ்வுடன் குண்டம் திருவிழா தொடங்கியது. வரும் 24ஆம் தேதி நள்ளிரவு மயான பூஜை, 27ஆம் தேதி காலை குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து வரும் பக்தர்கள் தீர்த்தம் எடுத்து பூவோடு எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம் அந்த வகையில் ஆனைமலை மாசாணியம்மன் கோவில் வீதியை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் 18 அடி நீளமுள்ள வேல் அலகு குத்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்.
No comments