யானை மீது தீயை வீசும் கொடூரம்- மசினகுடியில் அரங்கேற்றம்
யானை மீது தீயை வீசும் கொடூரம் மசினகுடி அரங்கேற்றம்
நீலகிரி மாவட்டம், மசினகுடியில் ரிசார்ட் உரிமையாளர்கள் டயரில் தீப் பற்ற வைத்து யானை மீது வீசிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
நீலகிரி மாவட்டம், மசனகுடியில் யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து பல்வேறு ரிசார்ட்டுகள் கட்டப்பட்டுள்ளது.
இந்த ரிசார்ட்டுகளை அகற்றக்கரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருந்தும் பல ரிசார்ட்டுகள் யானை வழித்தடங்களில் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நேற்று இரவு ரிசார்ட் அருகே வந்த காட்டு யானை ஒன்றின் மீது ரிசார்ட் உரிமையாளர்கள் டயரில் தீ பற்ற வைத்து அதன் தலை மீது வீசிய கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.
யானைமீது டயரில் தீ பற்ற வைத்து வீசும் வீடியோவம் பரவி வருகிறது.
பணத்திற்காக யானை வழித்தடங்களில் ரிசார்ட்டுகள் அமைப்பதே மிகப்பெரிய குற்றமாக இருக்கும் நிலையில், யானை மீது டயரில் தீ பற்ற வைத்து வீசும் செயல் மிகப் பரிய குற்றமாகும்.
இது போன்று மனிதர்கள் செயல்படுவதால் தான் கொரோனா போன்ற கொள்ளை நோய் மனிதர்களை தாக்கி கொன்று வருகிறது.
இருந்தும் இது போன்ற சில மனிதர்கள் திருந்தாமல் யானைகள் மற்றும் வன உயிரினங்களை கொடுமைப்படுத்துகின்றனர்.
இந்த சம்பவத்தில் அரசு தலையிட்டு ரிசார்ட் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் யானை வழித்தடங்களில் உள்ள ரிசார்ட் டுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தப் பதிவு குறித்த தங்களின் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யவும்.
No comments