யானையை தீ வைத்து எரித்து கொன்ற கொலைகாரர்கள்
யானையை தீ வைத்து எரித்து கொன்ற கொலைகாரர்கள்
நீலகிரி மாவட்டம் மசினகுடி ரிசார்ட் உரிமையாளர்கள் யானையை தீவைத்து எரித்துக் கொன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.
நீலகிரி மாவட்டம் மசினகுடி யில் யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து பல்வேறு தனியார் ரிசார்ட்டுகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த ரிசார்ட்கள் செயல்பட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் ரிசார்ட்களை அகற்ற அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இருந்தபோதும், யானை வழித்தடங்களில் பல்வேறு தனியார் ரிசார்ட்டுகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சமீபத்தில் ரிசார்ட் ஒன்றின் அருகே வந்த யானையை ரிசார்ட் உரிமையாளர்கள் டயரில் தீப்பற்றி வைத்து யானை மீது வீசி யானையைப் பற்றி எரிய செய்தனர்.
இதில் யானையின் தலை உடல் எரிந்து யானை பரிதாபமாக உயிரிழந்தது.
இந்த சம்பவத்தில் ரிசார்ட் உரிமையாளர் ஒருவரும், ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
No comments