Breaking News

இளைஞர்கள் பாரம்பரிய கலாச்சாரத்தை மறந்துவருகின்றனர்-ஆர்எஸ்எஸ் மாநிலத்தலைவர் வருத்தம்

 


இளைஞர்கள் பாரம்பரிய கலாச்சாரத்தை மறந்துவருகின்றனர்

ஆர்எஸ்எஸ் மாநிலத்தலைவர் வருத்தம்

பொள்ளாச்சி
தமிழகத்தில் இளைஞர்கள் பாரம்பரியா கலச்சாரம், பண்பாட்டை மறந்துவருகின்றனர் என ஆர்எஸ்எஸ் மாநிலத்தலைவர்  ஆர்.வி.எஸ்.மாரிமுத்துவருத்தம் தெரிவித்தார்.
 பொள்ளாச்சியில் தெய்வீக தமிழக சங்கம் துவக்கவிழா வெள்ளிக்கிழமை கே.கே.ஜி.திருமணமண்டபத்தில் நடைபெற்றது. ஆர்எஸ்எஸ் மாநிலத்தலைவர் ஆர்.வி.எஸ் மாரிமுத்து பங்கேற்று தெய்வீக தமிழக சங்கத்தை துவக்கி வைத்து, அந்த சங்கத்தின் விழிப்புணர்வு புத்தகத்தையும் வெளியிட்டார். இந்துக்களுக்கும், இளைஞர்களுக்கும் தேச பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் சங்கம் விழிப்புணர்வு செய்யவுள்ளது. தமிழகத்தில் ஒன்றரை கோடி குடும்பங்களுக்கு சங்கத்தின் விழிப்புணர்வு புத்தகத்தையும் வழங்கவுள்ளனர். ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் செல்லக்குமார், சுரேஷ்பாரதி, தனபாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்எஸ்எஸ் மாநிலத்தலைவர் ஆர்விஎஸ் மாரிமுத்து கூறுகையில்,,ஆன்மீகத்திலும், தொழில்துறையிலும் பாரத நாட்டிற்கு வழிகாட்டியாக தமிழகம் இருந்தது. ஆனால், தற்போது அந்த நிலை மாறிவிட்டது. தேச பக்தி குறைந்து பண பக்தி அதிகரித்துவிட்டது. கக்கன், காமராஜர் போன்ற ஆட்சியாளர்களை பார்க்கமுடிவதில்லை. சிலர் தமிழகத்தில் ஜாதி உணர்வை தூண்டிவருகின்றனர். கோயில் சிலை திருட்டு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. கோயில்நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு இந்து கோயில்கல் மூலம் 4000 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தும் பெரும்பாலான கோயில்களில் தீபம் ஏற்றக்கூட நிதி ஒதுக்கப்படுவதில்லை. கோயில் பூசாரிகளுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது. இளைஞர்கள் பாரம்பரிய கலாச்சாரம்,பண்பாடுகளை மறந்துவருகின்றனர். மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டால்தான் சமுதாய மாற்றம் ஏற்படும். தெய்வீக தமிழக சங்கம் மூலம் இளைஞர்கள், மக்கள், இந்துக்கள் மத்தியில் தேச பக்தி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.

----

No comments