பாஜகவினர் பிரம்மாண்ட வரவேற்பு: அரை கி.மீ. உற்சாகமாக நடந்து வந்தார் அமித்ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக நேற்று மதியம் சென்னை வந்தார். விமான நிலையத்துக்கு வெளியே சாலையின் இருபுறமும் கலை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், பேண்ட் வாத்தியம் முழங்க பாஜகவினர் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர். இந்த வரவேற்பில் உற்சாகம் அடைந்த அமித்ஷா காரில் இருந்து இறங்கி 400 மீட்டர் தூரம் நடந்து வந்து, தொண்டர்களை பார்த்து கை அசைத்து அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.
இந்த வரவேற்பு குறித்து ட்விட்டரில் தமிழில் பதிவிட்ட அமித்ஷா, “சென்னை வந்தடைந்தேன். தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே. இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் எனது அன்புக்குரிய தமிழக சகோதர சகோதரிகள் இடையே உரையாற்றுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments