பொள்ளாச்சி அருகே யூரியாவை வைத்து பிளைவுட் ஒட்டும் பசை தயாரித்த நிறுவனத்திற்கு சீல்
பொள்ளாச்சி, நவ.19
விவசாயத்திற்கு பயன்படுத்தும் மானிய விலை யூரியாவை வைத்து பிளைவுட் ஒட்டும் பசை தயாரித்த நிறுவனத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்ததுடன் 927 மூட்டை யூரியாவையும் பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சி அடுத்த கணபதிபாளையத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் மானிய விலை யூரியாவை பதுக்கி வைத்திருப்பதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பொள்ளாச்சி சார்-ஆட்சியர் வைத்திநாதன், ஆனைமலை வட்டாட்சியர் வெங்கடாச்சலம் மற்றும் வருவாய்த்துறையினர் புதன்கிழமை கணபதிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது, அந்த நிறுவனம் பிளைவுடன் ஒட்டும் பசை தயாரிக்கும் நிறுவனம் என்பது தெரியவந்தது. தொடர்ந்து சோதனை செய்ததில் அந்த நிறுவனம் விவசாயத்திற்கு பயன்படுத்தும் மானிய விலை யூரியாவை வைத்து, அதனுடன் சில கெமிக்கல்களை சேர்த்து பிளைவுட் ஒட்டும் பசை தயாரிப்பது தெரியவந்தது.
இதையடுத்து, நிறுவனத்தில் பதுக்கி வைத்திருந்த 927 மூட்டை மானிய விலை யூரியாவை பறிமுதல் செய்ததுடன், நிறுவனத்தையும் பூட்டி சீல் வைத்தனர். நிறுவனத்தின் உரிமையாளர் முஸ்தபா என்பவர் மீதும் ஆனைமலை போலீஸார் வழக்குபதிவு செய்ய சார்-ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார்.



No comments