23ம் தேதி பொள்ளாச்சி வருகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
23ம் தேதி பொள்ளாச்சி வருகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
பொள்ளாச்சி, ஜன.19
வரும்
23ம் தேதி தமிழக முதல்வர் பொள்ளாச்சி வருவது குறித்த ஆலோசனைக்கூட்டம்
பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவை
துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமை வகித்தார். பொள்ளாச்சி
சார்-ஆட்சியர் வைத்திநாதன் முன்னிலை வகித்தார்.
நகராட்சி ஆணையர்
காந்திராஜ், வட்டாட்சியர்கள்
தணிகைவேல், வெங்கடாச்சலம், டிஎஸ்பிக்கள் சிவக்குமார், விவேகானந்தன்,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலு, அசோகன், விவேகானந்தன்
மற்றும் பலதுறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
தமிழக முதல்வர்
எடப்பாடி பழனிச்சாமி வரும் 23ம் தேதி பொள்ளாச்சி வரவுள்ளார். ஆகவே
அனைத்து துறை அதிகாரிகளும் முதல்வர் வருகையையொட்டி அதற்கான பணிகளை
விரைந்து செய்யவேண்டும். 23ம் தேதி மாலை பொள்ளாச்சி-கோவை சாலையில் தனியார்
திருமணமண்டபத்தில் உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, மாலை 3 மணியளவில்
பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் பொதுமக்களிடையே உரையாற்றுகிறார்.
அதற்கு
பிறகு ஜமீன்ஊத்துக்குளி வழியாக ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் சாமி தரிசனம்
செய்கிறார். சாமி தரிசனம் முடித்துவிட்டு பொதுமக்களிடையை ஆனைமலையில்
உரையாற்றுகிறார். தொடர்ந்து பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் நா.மூ.சுங்கம்
பகுதியில் பொதுமக்களிடையை உரையாற்றுகிறார்.
தொடர்ந்து நெகமம் சென்று
நெகமத்தில் பேசுகிறார். ஆகவே முதல்வர் வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்,
சாலை போக்குவரத்து சீர்படுத்துதல், சுகாதார வசதி, அடிப்படை வசதிகளை
பொதுமக்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கும் பணிகளை செய்யவேண்டும் என்றார்.
----


No comments