Breaking News

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் நடை 13ம் தேதி இரவு அடைப்பு

 


பொள்ளாச்சி, டிச.10
 ஆனைமலை மாசாணியம்மன் கோயில் நடை வரும் 13ம் தேதி இரவு அடைக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம், ஆனைமலை மாசாணியம்மன் கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளிமாநில பக்தர்களும் தரிசனத்திற்கு அதிக அளவில் வந்துசெல்வார்கள். வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் அமாவாசை போன்ற விஷேச நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். கோயில் காலை 6 மணி நடை திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம். அமாவாசைக்கு முந்தைய நாள் இரவு மட்டும் கோயில் நடை அடைக்கப்படாமல் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். தற்போது கரோனா பரவல் காரணமாக வரும் 13ம் தேதி இரவு அமாவாசைக்கு முந்தையநாள் இரவு கோயில் நடை அடைக்கப்படும் என மாசாணியம்மன் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.




 

No comments