மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம்
பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு டிஜிட்டல் சான்றிதழ் வழங்கும் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . இந்த முகாமில் எலும்பு முறிவு மருத்துவர், கண் மருத்துவர் ,காது மூக்கு தொண்டை மருத்துவர் ,குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் மனநல மருத்துவர் கலந்து கொள்கின்றனர்.
இன்று நடந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் கார்த்திகேயன் நோயாளி நல சங்க உறுப்பினர் வெள்ளை நடராஜ் , கிட்டான் மற்றும் பொள்ளாச்சி நகராட்சி கவுன்சிலர் முருகானந்தம் கலந்து கொண்டனர்.
No comments