மாசாணி அம்மன் கோயிலுக்கு விரைவில் கும்பாபிஷேகம்
ஆனைமலை மாசாணியம்மன் திருக்கோயிலின் குடமுழுக்கு விரைவில் நடைபெற உள்ளது . இதற்காக ஏற்கனவே பாலாயம் பூஜை முடிவடைந்தது தற்போது கோயில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு ராஜகோபுரம் உட்பட அனைத்துக் கோபுரங்களுக்கும், சாலகாரத்திற்கும் வர்ணம் பூசும் பணி சுமார் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தகவலை அறங்காவலர் குழுத் தலைவர் எஸ்.முரளிகிருஷ்ணன் தெரிவித்தார். உதவி ஆணையர் உ.ச.கைலாசமூர்த்தி, அறங்காவலர்கள், கோவில் கட்டடப் பொறியாளர், கோவில் நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments