Breaking News

சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிட்டு திருவிழா

21 ம் ஆண்டு ஆவணி  மூலப் பிட்டுத் திருவிழா பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோயில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
பொள்ளாச்சி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிவில் அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கும் , வந்தியம்மை தாயாருக்கும் , அருள்மிகு மாணிக்கவாசகர் சுவாமிகளுக்கும் அபிஷேக ஆராதனை மற்றும் ஆவணி மூலப்பிட்டுத் திருவிழா பொள்ளாச்சி வாழ் வாணிய சமூகத்தினர் மிகவும் சீரோடும் சிறப்போடும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு  வாணியர் மடத்தில் இருந்து அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு சீர்வரிசைகள் பக்தர்களால் கொண்டுவரப்பட்டு அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில்  சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இதன் பின்னர் குழந்தைகள் சிவன் மற்றும் வந்தியம்மை தாயார்  வேடம்  அணிந்து  திருவாசம் பாடி வழிபாடு நடத்தினார். இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

No comments